அஞ்சுகிராமம் மார்ச்-2
திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் கன்னியாகுமரியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. இப்போட்டியில் வாரியூர் அரசு உயர்நிலைபள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கும் நிகழ்ச்சி வாரியூர் அரசு உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் அலெக்சாண்டர் தலைமையில் நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகன், செயலாளர் வாரியூர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஒட்டல் பணியாளர்கள் சங்க மாநில தலைவரும், சமூக ஆர்வலருமான வடிவை. சுரேஷ் கிருஷ்ணா கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்