கிருஷ்ணகிரி,ஏப்.18- தமிழ்நாடு அரசு சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் 16 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மாநிலத் தலைவர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சம்பங்கி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழக அரசு எந்த முன்னறிவிப்பும் இன்றி,சிறு கனிம நில வரியை கன மீட்டர் என்று இருந்ததை மெட்ரின் டன் என மாற்றி பல மடங்கு வரியை உயர்த்தியுள்ளது.
இதன் காரணமாக, ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை இருந்த ஒரு யூனிட் ஜல்லி ரூ. 5 ஆயிரமாகவும்,எம்.சாண்ட் யூனிட் ரூ.5,500 முதல் ரூ.6,000 வரையும், பி.சாண்ட் யூனிட் ரூ. 7 ஆயிரமாகவும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளாத நிலை ஏற்படும்.மேலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்.
இதன் வேலைநிறுத்தம் காரணமாக, கிருஷ்ணகிரி சூளகிரி ஓசூர் தளி பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் 200க்கும் மேற்பட்ட கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. கர்நாடகா ஆந்திரா கேரளா மாநிலங்களில் சிறு நிறுவனங்களுக்கு வரி விதிப்பது இல்லை. ஆனால் தமிழகத்தில் 60 ரூபாய் மதிப்பு உள்ள ஒரு பொருளை 90 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள கிரானைட் குவாரிகள் கிரஷர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சேலம், நாமக்கல்,தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குவாரிகள் இயங்காது.அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும்.
எனவே, உடனடியாக அரசு தலையிட்டு,பன்மடங்கு உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு நியாயமான வரி விதைப்பை அமல்படுத்த வேண்டும்.அமல்படுத்தும்வரை, எங்கள் போராட்டம் தொடரும் என கிருஷ்ணகிரி மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சம்பங்கி தெரிவித்தார்.
கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்
You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics