ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் 14 பவுன் நகையை மீட்டு தந்த அதிமுக தொண்டருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளாது.
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜையை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக தென்காசியை சேர்ந்த நம்பீஸ்வரி (40) சிவ பக்தர் தனது குடும்பத்துடன் கோயிலுக்கு வந்திருந்தார்.
கோயிலில் மண்டல பூஜை தரிசனம் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பள்ளமோர்குளம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் வெங்கடேஷ் (30) சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார். தனது செருப்பு வெளியே கிடந்ததை எடுக்க சென்றபோது அங்கே ஒரு ஹேண்ட் பேக் கிடந்தது. அந்த பேக்கை எடுத்த அதிமுக தொண்டர் வெங்கடேஷ் அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் அந்த ஹேண்ட் பேக்கை பரிசோதனை செய்தபோது அதனுள் 14 பவுன் நகை ரூபாய் 52 ஆயிரம் பணம் ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் இருந்தது. பேக்கைத் தவிர விட்ட தென்காசியை சேர்ந்த பக்தரை தொடர்பு கொண்ட போலீசார் அவர்களை வரவழைத்து போலீசார் முன்னிலையில் அதிமுக தொண்டர் வெங்கடேஷ் தென்காசி பக்தர் நம்பிஸ்வரியிடம் ஒப்படைத்தார். அதிமுக தொண்டரின் சேவையை போலீசார் மற்றும் பக்தர்கள் நன்றியுடன் பாராட்டு தெரிவித்தனர்.
அதிமுக தொண்டரின் நற்செயலை கேள்விப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் அதிமுக தொண்டர் வெங்கடேச நேரில் அழைத்து அவரது செயலை பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் கூறினார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சரவணகுமார் மாணவர் அணி துணை செயலாளர் செந்தில்குமார், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் உதுமான் அலி, ஸ்டாலின், நாகராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
உத்தரகோசமங்கையில் தென்காசி பக்தரின் 14 பவுன் நகை மற்றும் பணத்தை மீட்டு தந்த அதிமுக தொண்டருக்கு பாராட்டு

Leave a comment