ஈரோடு டிச 14
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் பெருந்துறை திருவேங்கிட பாளையம் தாய் நகர் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் நாகரத்தினம் என்பவர் தலைமையில் ஒரு மனு கொடுத்தனர்.
அதில் எங்கள் பகுதியில் செயல்படும் கோழி பண்ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் கோழி பண்ணையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கோழிப்பண்ணை சரியாக பராமரிக்கப்படாததால் அதிலிருந்து வரும் அதிகமான ஈக்களால் மனிதர்களும் கால்நடைகளும் பல் வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் . எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.