மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட அபாயாம்பாள்புரம் என்ற பகுதியில் ஏழை மக்கள் 120 குடும்பத்தினர் பலர் குடிசை வீடுகளில் தங்கி உள்ளனர். இவர்களில் பலர் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாததால் அவர்களது வசதிக்காக அப்பகுதியில் ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள நகராட்சி கழிப்பறை சேதமடைந்தது. இதுயடுத்து அப்பகுதியில் நகராட்சி மேம்பாட்டு நிதி ரூ.19.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகராட்சி கழிப்பறை கட்டுவதற்கான பணிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கியது. நகர் மன்ற உறுப்பினர் சர்வோதயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் குண்டாமணிசெல்வராஜ் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி செயற்பொறியாளர் மகாதேவன், நகராட்சி துணைத்தலைவர் சிவகுமார் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.



