மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து தருவதற்காக தமிழகத்தில் முதல்முறையாக தினந்தோறும் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக குறைதீர்க்கும் வாகனத்தை குத்தாலம் மேற்கு ஒன்றியம் கங்காதரபுரம் மற்றும் திருமங்கலம் ஊராட்சியில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் தொடங்கி வைத்து மனுக்களை பெற்றுக் கொண்டார். பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்தி தர இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், தீர்வு ஏற்படுத்தி தரமுடியவில்லை என்றால் அதற்கான காரணத்தையும் நிர்வாகிகள் பொதுமக்களிடம் தெரிவிப்பார்கள் என்பதால் பொதுமக்கள் ஊராட்சியில் வாரத்திற்கு மூன்று நாள் இயங்கும் இந்த வாகனத்தின் செல்போன் 7381 222 444 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் மனுக்களை அளித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். வீடு தேடி பொதுமக்களின் குறை கேட்டு வரும் வாகனம் ஊராட்சி பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஏ ஆர் ராஜா, அப்துல் மாலிக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவங்கி வைத்தார் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன்.

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics