தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் சார்பில் தமிழர்களின் திருநாளான பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் .சிறப்பு விருந்தினராக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி, தருமபுரி வருவாய் துறை அலுவலர் சண்முகசுந்தரம், தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி காயத்ரி, நாகராஜன், சின்னமுத்து ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கை ஏற்றி வைத்தும், பொங்கல் திருவிழாவை துவக்கி வைத்தனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு கல்லூரியின் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், வழுக்கு மரம் ஏறுதல், உரியடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. உழவர் திருநாளை போற்றும் விதமாக மாடுகளுக்கு சிறப்பு பூஜை செய்து பொங்கல் படைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மாவட்டத்தில் முதல் இடத்தையும், மாநிலத்தில் மூன்றாவது இடத்தையும் பிடித்து சாதனை செய்தனர் என்று தாளாளர் தெரிவித்தார். இவ்விழாவில் கல்லூரியின் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று பொங்கல் திருநாளை கொண்டாடினர்.



