ஈரோடு ஜன 13
ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களான மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவங்கள் பொறியியல் மற்றும் தொழில் நுடபம், கல்வியியல், கலை மற்றும் அறிவியல், சென்டரல் பள்ளி வளாகங்களில் தமிழரின் பாரம்பரிய உழவர் திருநாளான பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமையேற்று விழாவை துவக்கி வைத்தார் காஞ்சிக்கோயில் அரிமா அறக்கட்டளை மற்றும் காஞ்சிக்கோயில் கொங்கு வெள்ளாளர் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைவரும், ராஜ் இயற்கை வேளாண் பண்ணையின் உரிமையாளருமான தங்கவேலு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணவர்களிடையே விவசாயத்தின் பெருமையையும், உழவுத் தொழிலின் மேன்மையையும், பொங்கல் திருநாளின் மகத்துவத்தையும் எடுத்துரைத்தார். மேலும் முதியோர்கள் சேமிப்பு பழக்கம் இல்லாத காரணத்தால் “கொரானா” காலத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. அதனால் மாணவர்களாகிய நீங்கள் இளம் பருவத்திலேயே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பிற்காலத்தில் பாதிக்காத வண்ணம் தங்களை மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து, ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பெண்களின் மனம் கவர்ந்த மருதாணி இடுதல், பொங்கல் பானைகளை அலங்கரித்தல், கோலமிடுதல், ஆண்களின் சலங்கை ஆட்டம். வழுக்கு மரம் ஏறுதல், கபடி, சேவல்சண்டை, குடைராட்டினம், குழுநடனம், தனிநபர் நடனம், தப்பாட்டம் போன்ற தமிழ் பாரம்பரியத்தை பறைசாட்டும் விதமாக பல்வேறு வகையான புகழ்மிக்க நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிந்து வந்திருந்த மாணவர்களின் வண்ணக்கோலங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தன. மேலும் அனைத்து கல்லூரி மாணவ-மாணவியர்களும் மிகுந்த ஆரவாரத்துடன் காலை முதல் மாலை வரை பலவித ஆட்டம் பாட்டங்களோடும் மாணவர்களின் உற்சாக கொண்டாட்டங்களும் நந்தாவின் கோலாகலப் பொங்கல் மகிழ்ச்சியை அள்ளித் தந்தது. பலத்த ஆரவாரங்களும்
நிகழ்வுகளின் முடிவில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் மற்றும் சிறப்பு விருந்தினர் சி. தங்கவேலு ஆகியோர் வழங்கி மாணவர்களைப் பாராட்டினார்கள்.
அனைத்துக் சார்பு கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழாவினை சிறப்பான முறையில்
செய்திருந்த கல்லூரி முதல்வர்கள் நிர்வாக அலுவலர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ் நந்தகுமார் பிரதீப் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் ஆகியோர் பாராட்டினர்.