தென்தாமரைகுளம்., ஜன. 10.தோவாளைஇராமலட்சுமி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கல் பானை எவ்வாறு வர்ணம் தீட்டுவது என்பதை பற்றி செய்முறை விளக்கத்துடன்பொங்கல் விழாவின் முக்கியத்துவம், சூரிய பகவானுக்கு நன்றிசொல்லுதல், விவசாயிகளுக்கு நன்றி சொல்லுதல், நமக்குஉணவு கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும்,அனைத்து கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் நாளேபொங்கல் திருநாள் போன்ற பல்வேறு கருத்துக்களை ஓவியஆசிரியர் நேச அருள் எடுத்துரைத்து மாணவர்களுக்கு
உந்துதல் நிகழ்ச்சி நடத்தி மகிழ்வித்தார்.
இதில் முதல்வர் மார்ட்டின், துணைமுதல்வர் செல்வி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.