கோவை ஏப்: 15
இந்திய அரசியல் அமைப்பின் தந்தை பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் சமத்துவ நாள் விழா பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பஞ்சலிங்கம் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆதிதிராவிட நலக்குழு நகர அமைப்பாளர் மாரிமுத்து அவர்கள் வரவேற்புரையாற்றினார், பொள்ளாச்சி நகர கழகச் செயலாளர் இரா. நவநீதகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், ஆதிதிராவிட நலக்குழு மாநில இணைச்செயலாளர் திப்பம்பட்டி ஆறுசாமி, கோவை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் மருதராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்
நிகழ்ச்சிக்கு நகரத் துணைச் செயலாளர் ச.தர்மராஜ், நாச்சிமுத்து, பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர்கள் தங்கவேல், பாத்திமா அக்பர், கந்த மனோகரி, உமா மகேஸ்வரி, மகளிர் அணி மாரியம்மாள், மாவட்ட பிரதிநிதிகள் வடிவேல், இரும்பு கடை சுப்பிரமணியன், நகர வழக்கறிஞர் அணி பிரபு, ஆறுமுகம், முன்னாள் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் தளபதி சைஜு, தொண்டரணி மாவட்ட தலைவர் கராத்தே ராஜா, கோவை தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஷானவாஸ்கான்,
பொள்ளாச்சி நகர தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மாசி, பிளம்பர் முருகன், பிங்கி நாகராஜ், 31 வது வார்டு சுபாஷ், ராஜ்குமார், சுகாஷ், ஆனந்தகுமார், ஆட்டோ நாகராஜ், ஆட்டோ பஞ்சலிங்கம், உதயசூரியன், ஆட்சி பட்டி வார்டு உறுப்பினர் செந்தில் குமார், சோழனூர் சூப்பர் முருகேசன், சோழனூர் நாகராஜ், மார்ச்ச நாயக்கன்பாளையம் சக்திவேல், 22 ஆவது வார்டு நகர திமுக பல்லடம் ரோடு வீ. விவேக் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்