திருப்பத்தூர்:செப்:04, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரில் எல்ஐசி பாலிசிதாரர்களின் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டமானது கிளை சங்க தலைவர் P. அருணகிரி தலைமையில் நடைபெற்றது. கிளை சங்க செயலாளர் N. பாஸ்கர் முன்னிலை வகித்து கோரிக்கை விளக்க உரையினை அளித்தார். LIAFI முகவர்கள் கிளைச் சங்க முன்னாள் தலைவர் Ln.S.V.ராஜேஷ், LICAOIசெயலாளர் G.முருகன், ஓய்வூதியர் சங்கம் M.ஞானமணி, கன்வீனர் CITU C.கேசவன், தலைவர் CITU A.ரங்கன், செயலாளர் S.ஜோதி, பொருளாளர் G.ரவி, விவசாய சங்கம் காமராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இப்ப பிரச்சாரக் கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கைகளான: எல் ஐ சி இன்சூரன்ஸ் பிரீமியத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கவும், எல் ஐ சி யை பொதுத்துறையில் தொடர்ந்து பாதுகாத்திடவும், எல் ஐ சி யின் பங்குகளை தனியாருக்கு தாரை பவார்க்க கூடாது எனவும், மக்கள் சேமிப்பை பாதிக்கும் பங்கு சந்தை சூதாட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தின் இறுதியில் AIEU பொருளாளர் C. ஹரிபாபு நன்றியுரை வழங்கினார். கூட்டத்தில் எல்ஐசி பாலிசிதாரர்கள், பொறுப்பாளர்கள், கிளைச் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.