நீலகிரி. நவ.19.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கவிஞர். பிரேம் சுரேஷ் எழுதிய பணித்துளியின் பாதயாத்திரை என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது. எழுத்தாளர் ராஜதுரை அணிந்துறையில் நூலேனி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. புத்தகத்தின் முதல் பிரதியை தமிழக சட்ட மைய இயக்குனர் விஜயன் வழக்கறிஞர் வெளியிட கோவை மாவட்ட வசந்தவாசல் இலக்கிய மன்ற மைதிலி யோகராஜ் பெற்றுக்கொண்டார். திராவிட முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் மற்றும் நீலகிரி மாவட்ட அறநிலையத்துறை தலைவர் நெல்லை கண்ணன், கோத்தகிரி பேரூராட்சி மன்ற தலைவி செயக்குமாரி, தமிழறிஞர் விவேராசு, லியாகத், ஜேசி. நாகராஜ், இந்திராணி ராதாகிருஷ்ணன், குறிஞ்சி இலக்கிய மன்ற கவிஞர் அகரம் சிவா, பாலகிருஷ்ணன் மற்றும் பொதுநல அமைப்பின் பிரதிநிதிகள் பத்திரிகை ஊடகத்துறையினர் பலர் கலந்து கொண்டு கவிதை நூல் குறித்து ஆய்வுரை வழங்கினர் . விழாவில் நூலாசிரியர் கவிஞர் பிரேம் சுரேஷ் அவர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு நண்பர்கள் சார்பில் அவருக்கு வெள்ளியால் ஆன பேனா வழங்கப்பட்டது. நிறைவாக கவிஞர் பிரேம் சுரேஷ் ஏற்புரை வழங்கினார்.