நாகர்கோவில் ஏப் 19
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார்.நீதிமன்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது புலன் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மார்த்தாண்டம் எல்லைக்குட்பட்ட 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்த நேசமணி என்பவரது மகன் சுதர்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய செய்யப்பட்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் சிறப்பு நீதிமன்ற நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள்.
நீதிமன்ற வழக்கு விசாரணை சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.