மதுரை திருப்பரங்குன்றத்தில் மலையில் உள்ள பள்ளிவாசலில் பல நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து மத பொதுமக்களும் சென்று தங்களின் வழிபாட்டு வழிமுறைகளை நேர்த்திகடன் செலுத்தி வரும் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை அவுலியா தர்கா
பள்ளிவாசல் தொடர்பாக, பல நூற்றாண்டுகளாக தொடரும் வழிபாட்டு உரிமைகள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை அவுலியா தர்காவின் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து ஆதார பூர்வமான உண்மையான அடிப்படையில் வழிபாட்டு முறைகள் மற்றும் உரிமை களை உறுதி செய்த பிறகும், தொடர்ந்து வழிபாட்டு உரிமைகளை தடுக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரியும், இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வழிபாட்டு முறைகளை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், திருபரங்குன்றம் சிக்கந்தர் அவுலியா தர்கா பள்ளி தலைவர் அக்பர்கான், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் அவுலியா தர்கா பள்ளிவாசல் செயலாளர் ஆரிப்கான் தலைமையில் மதுரை
முஸ்லிம் ஐக்கிய ஜமாத், அனைத்து கட்சிகள், இயக்கங்கள், ஜமாத்
நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் இணைந்து மதுரை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் நேரடியாக மனு அளித்தனர்.