தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பூபதி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் அனைவரும் முன்னேற்ற சங்கத்தின் முதன்மையான கோரிக்கையான ஒருங்கிணைந்த பதவி உயர்வு மற்றும் தனி ஊதியம் குறித்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மாநில மையத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினிடம் எங்கள் பணி அமர்வில் சமநீதி இல்லாத தன்மை வருத்தம் அளிக்கிறது என்று எடுத்துக் கூறினோம் அதனைக் கேட்ட முதல்வர் அதை செய்து கொடுப்பதாக தெரிவித்தார் அதே போல் தனி ஊதியம் தொடர்பாகவும் கோரிக்கை வைக்கப்பட்டது இதை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதை மாநில மையத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் முதல்வரை சந்திக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும்,பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம்.எல்.ஏவுக்கு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.