நாகர்கோவில் – ஆக – 13,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
நேற்று ( திங்கள்கிழமை) மக்கள் குறை தீர்ப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அந்த வகையில் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் (காங்) மற்றும் மாதவலாயம் ஜமாத் தலைவர் எஸ். முஹைதின் சாகுல் ஹமீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மாதவலாயம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புளியன் விளை , சந்தை விளை, காந்திஜீ நகர் , சோழபுரம், கண்ணன் புதூர், செண்பகராமன் புதூர், தோப்பூர், அனந்தபத்மநாபபுரம், சண்முகபுரம், உட்பட சுமார் பத்து ஊர்களில் உள்ள சுமார் 25 ஆயிரம் மக்கள் வாழ்ந்துவரும் ஊர்களின் வழியாக (கன்னியாகுமரி பணிமனையிலிருந்து ) இயக்கப்பட்டு வந்த தடம் எண் – 319 பேருந்தில் இப்பகுதியில் உள்ள மக்கள் பூதப்பாண்டி நீதிமன்ற பணிகள், தாலூகா அலுவலக பணிகள், விவசாய பணிகள், வங்கிகளுக்கு மற்றும் அவரவர் அவசியத்திற்க்கு சுமார் 500 பேர் வீதம் தினமும் இந்த பேருந்தில் திட்டுவிளை, தடிக்காரண் கோணம் போன்ற ஊர்களுக்கு தினமும் சென்று வருகின்ற வழித்தடம் ஆகும். இந்த வழித்தடத்தில் இயங்கி வந்த பேருந்தை எந்த முன் அறிவிப்பும் இன்றி குடியிறுப்பு பகுதிகளே இல்லாத பகுதி வழியாக மாற்றுபாதையில் போக்குவரத்து கழகம் இயக்கி வருவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்க்கு அளாகி வருவதாகவும்,
நாகர்கோவிலிருந்து மாதவலாயம் வழியாக முன்னாள் மாவட்ட ஆட்சித்லைவர் மதுமதி அவர்களின் உத்தரவுபடி தினமும் காலை, மதியம், மாலை என மூன்று முறை நாகர்கோவிலில் இருந்து ஆற்றங்கரை பள்ளி வாசலுக்கு மாதவலாயம் பாதை வழியாக ஆற்றங்கரை பள்ளிவாசல் வரையிலும் இயங்கிவந்த பேருந்தை தற்போது காலை ஒருமுறை மட்டுமே இந்த வழித்தடத்தில் இயங்குகிறது . ஆற்றங்கரை பள்ளிவாசல் வரையிலும் செல்லும் இப்பேருந்து இந்த வழித்தடத்தில் திரும்பி வராமல் , மாற்று பாதையில் சென்று விடுகிறது எங்கள் பகுதிக்கு திரும்பி வருவதில்லை எனவே ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் குடும்பமாக ஒன்று சேர்ந்து ஆற்றங்கரை பள்ளி வாசலுக்கு தினமும் நேர்ச்சை கடன்களை செலுத்தவும் வாங்கவும் சென்று வருவதற்க்கு ஏதுவாக மீண்டும் மூன்று நேரம் அதே வழித்தடத்தில் இயக்க கோரியும்,
மாதலயம் ஊராட்சியில் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரவும், அதே போன்று வெள்ளமடம் பகுதியில் இயங்கி வந்த கூட்டுறவு விவசாய வங்கியை பீமநகரி பகுதிக்கு இடமாற்றம் செய்ததால் எங்கள் ஊர் சுற்று வட்டார பகுதி மக்கள் வங்கிகளுக்கு செல்ல ஆட்டோவில் செல்ல வேண்டும் அல்லது பாதுகாப்பு இல்லாமல்
வெகுதூரம் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் (கையில் கொண்டு செல்லும் பணத்திற்க்கும் அணிந்திருக்கும் நகைகளுக்கும் ) பாதுகாப்பற்ற சூழலில் நடந்து செல்ல கூடிய சிரமத்திற்கு ஆளக்கப்பட்டுள்ளனர். எனவே எங்கள் பகுதியில் ஒரு கூட்டுறவு விவசாய வங்கி கிளையும் அமைத்து தரும்படி அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.