திருப்பத்தூர்:மார்ச்:19, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் வருவாய் பகுதிக்கு உட்பட்ட சுடுகாட்டு நிலத்தை முறையாக நில அளவை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமம் சர்வே எண் 94 ல் உள்ள சுடுகாட்டு நிலத்தை நில அளவை செய்யாமல் ரயில்வே புறம்போக்கு நிலத்தை திசை காட்டி தனி நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக பச்சூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சர்வே எண் 94 சுடுகாட்டு நிலத்தை உயர் அதிகாரிகள் தலைமையில் நில அளவை செய்ய வேண்டும். அறிவிப்பு பலகை வைக்கப்பட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சுடுகாட்டு நிலத்தில் உள்ள புளிய மரத்தினை கிராம நிர்வாக அலுவலரின் ஒத்துழைப்பில் வெற்றி ரூபாய் 70 ஆயிரம் வரையில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பினை உரிய நபரிடம் இருந்து பெற வேண்டும்.
பச்சூர் பகுதியில் உள்ள பாறையூர் கிராமத்தின் சுடுகாட்டு பகுதிகளை முறையாக அளவீடு செய்யவில்லை, இந்தப் பகுதிக்குரிய அனைத்து ஆவணங்களையும் முறையாக கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப் பகுதியில் பூத உடல்களை அடக்கம் செய்வதற்கு ஏதுவாக நிலத்தை கையகப்படுத்த முற்பட்டபோது முறையான விசாரணை மேற்கொள்ளாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும் மனுதாரர் தலைப்பு தரப்பில் கூறும் போது, சம்பந்தப்பட்ட சுடுகாட்டு இடத்தை முறையாக அளந்து கொடுப்பதாக கூறி இதுவரை எந்த ஒரு தகவலும் அளிக்கப்படவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து முறையாக தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
நிலத்தை அளப்பதாக கூறி சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் வரவே இல்லை என்றும், சுடுகாட்டிடத்தை அளந்து முறையாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு முறையான காலங்காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டுப் பகுதியினை மீட்டு தரவும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சர்வேயர் மீது முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
வாராந்திர திங்கள் தின மனுவினை அளிக்கும்போது
பாமக ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரசாந்த்,
வன்னிய சங்க ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பிரதாப், வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் மேகநாதன்
வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் அரவிந்த், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர்கள் ஜீவா ,நந்தா, பச்சையப்பன், சமூக செயற்பாட்டாளர்கள் சென்னகேசவன், முருகேசன், சந்தியா சென்ன கேசவன் ஆகியோர் இருந்தனர்.
சுடுகாட்டு இடத்தை முறையாக அளவீடு செய்ய மனு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics