ஈரோடு மே 2
தமிழக அரசு தற்போது அரசு வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாகவும் இது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறி ஈரோடு மாவட்ட நில முகவர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர் மேலும் 234 தொகுதி எம்எல்ஏ க்களுக்கும் இது தொடர்பாக பதிவு தபால் அனுப்பினர்
இந்த நிலையில் ஈரோட்டில் ஈ வி கே எஸ் இளங்கோவனை சந்தித்து மனு கொடுத்தனர்
ஈரோடு மாவட்ட நில முகவர்கள் மற்றும் தரகர்கள் நல சங்க தலைவர் செல்வமணி செயலாளர் ராஜு பொருளாளர் வைரமணி மற்றும் நிர்வாகிகள் இந்த கோரிக்கை மனுவை கொடுத்தனர் .