ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகர் குடியிறுப்பு பகுதிக்குள் அமைந்திருக்கும் டாஸ் – மார்க் மதுபான கடையை மாற்ற கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.
நாகர்கோவில் – செப்- 03,
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகர் குடியிறுப்ப பகுதிகளுக்கு மத்தியில் மதுபானக்கடை எண் – 4701 செயல்பட்டு வருகிறது மேற்ப்படி இங்கு செயலப்பட்டு வரும் மதுபான கடையால் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்கு செல்லும் பெண்களும் பொதுமக்களும் இந்த மதுபானக்கடையை தாண்டிதான் செல்ல வேண்டியுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் தினந்தோறும் வெளியில் செல்ல முடியாத பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று வரும் இப்பகுதி பெண்களை வர்னித்து பாடல்கள் பாடுவதும், அவதூறு வார்த்தைகள் பேசி கிண்டல் செய்வதும் , அறை குறை ஆடைகளுடன் சாலையில் படுத்துகிடப்பதும் வாடிக்கையாக உள்ளது. பெண்கள் மிகுந்த அச்சத்துடனே வெளியில் சென்று வீடு திரும்ப வேண்டிய சூழல் நிலவி வருகிறது. போதையில் தினம், தினம், மது ப்பிரியர்கள் அசிங்கமான வார்த்தைகளால் சண்டை போடுவதும் , பாட்டில்களை உடைத்து வீசுவதும் வாடிக்கையாக உள்ளது, இதனால் அப்பகுதியை கடந்து நடந்து வரும் பொதுமக்களின் கால்களை கண்ணாடி துகள்கள் பதம்பார்த்து விடுகிறது. போதையில் சாலை ஓரம் அமர்ந்து முகம் சுழிக்கும் வன்னம் மது அருந்துவது அப்பகுதி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடுமோ என்ற அச்ச உணர்வு மனதில் எழுகிறது. மேலும் போதையில் சாலையில் நின்று கொண்டு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்க்கும் மட்டுமல்லாமல் 108 வாகனத்திற்க்கு கூட வழிவிடாமல் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கட்டுப்படுத்தும் காவல் நிலையம் இந்த டாஸ்மாக் கடையின் மிக அருகாமையில் அமைந்திருந்தும் காவல் துறையினர் கண்டும் காணாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.