கோவை செப்:04
கோவை மாவட்டம் மத்திய மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இலவச வீட்டு மனை பட்டா சலவைப்பெட்டி நலிந்த சலவைத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி சலவைத் தொழிலாளர் அவரது கணவர் இறந்து வாடும் குடும்பத்திற்கு சுய தொழில் செய்ய நிதி உதவி வழங்குமாறு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவை பெற்று பரிசீலித்து நிறைவேற்றித் தருமாறு தங்களின் மேலான சமூகத்தை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது சங்கம் 1950 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
பதிவு எண்.1605 MDS என்று துவங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை வண்ணார்களை SC பட்டியலில் சேர்க்கச் சொல்லி போராடி வருகிறோம். இந்தியாவில் 17 மாநிலங்களிலும், 3 யூனியன் பிரதேசங்களிலும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சில தாலூக்காகளிலும் SC பட்டியலில் உள்ளார்கள், அரசன் முதல் ஆண்டி வரை அனைவருக்கும் சலவை செய்து கொடுக்கிறோம்.
தமிழகம் முழுவதும் ஒரே சீராக அனை
வரையும் SC பட்டியலில் சேர்க்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சல்லைத்தொழிலாளர்களுக்கு கரிபோட்டு தேய்க்கும் இஸ்திரி பெட்டிக்கு பதிலாக எரிவாயு இஸ்திரிப் பெட்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை சலவைத்
தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரமும், இலவச எரிவாயு சிலிண்டரும் வழங்கி வண்ணார் சமுதாய முன்னேற்றத்திற்கு உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்
கொள்கிறோம்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நவீன சலவையகம் அமைக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி 10 பேர் கொண்ட ஆண்கள் சுய உதவிக்குழு அமைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உடன் மாநில பொதுச் செயலாளர் எம் என் சுப்பிரமணியம் மாவட்டத் துணைச் செயலாளர் ஏ வெள்ளிங்கிரி மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம் மற்றும் நிர்வாகி நாகராஜ் அனைவரும் கலந்து கொண்டனர்.