மதுரை.
ஜூலை.17
மதுரை பசுமலை மேல் நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழா பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் ரத்தின ராஜா ஆலோசனையின் பேரில் தலைமை ஆசிரியை மேரி தலைமையேற்று துவக்கிவைத்தார். உதவி தலைமையாசிரியர்கள் ரிச்சர்ட் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரதீப் சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் குரு விலங்கேஸ்வரன் மற்றும் அகிலேஸ் உள்ளிட்ட மாணவர்கள் பலர் காமராஜர் வேடம் அணிந்து பலரையும் வியக்க வைத்தனர்.
இதில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் தமிழரசன் காமராஜரின் வரலாறு பற்றி எடுத்துரைத்தார். ஏழாம் வகுப்பு மாணவர் சிவகார்த்திகேயன் காமராஜர் பற்றிய சிறப்பு கவிதையை வாசித்தார்.
தொடர்ந்து பள்ளியின் தமிழாசிரியை சித்ரா காமராஜர் பற்றியும் அவர் செய்த சிறப்புகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் நடனம் ஓவியம் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி அனைவரையும் கவர்ந்தது.
இந்த போட்டிகளை தமிழாசிரியர்கள் மற்றும் ஓவிய ஆசிரியர் சிறப்பாக ஒருங்கிணைந்து நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விழா நிறைவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியை மேரி பாராட்டு செய்து நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
இவ்விழாவில் ஆசிரிய பெருமக்களும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் எபிராஜேந்திரன், தமிழாசிரியர் மோசஸ்ராஜன். மிகச் சிறப்பாக செய்திருந்தார்.