கோவை மே 17
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே, சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஹரிஸ்ரீ என்பவர் மீது தற்காப்பிற்காக கோவில் பாளையம் காவல் ஆய்வாளர் துப்பாக்கி சூடு சக்திவேல் என்பவருடன் ஏற்பட்ட தகராறின் போது, ஹரிஸ்ரீ தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டி அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி உள்ளார்.
இது சம்பந்தமாக சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு ஹரிஸ்ரீயை கைது செய்தனர் அப்போது ஹரிஸ்ரீயின் வாக்குமூலத்தின்படி துப்பாக்கியை மீட்க சூலூர் அருகே அழைத்துச் சென்றபோது, ஹரிஸ்ரீ தான் மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து துப்பாக்கி எடுத்து தப்பிக்க முயன்று போலீசாரை நோக்கி சுட, தற்காப்பிற்காக கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் ஹரிஸ்ரீயின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டனர்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேற்படி குற்றவாளி இதற்கு முன்னரும் பீளமேடு காவல் நிலையத்தில் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.