சங்கரன்கோவில் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அனுமதி
2025 – 2026 மானிய கோரிக்கையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிக்கு ரூ.300 கோடி மதிப்பீட்டில் முதலீடுகளை ஈர்த்து சுமார் 3000 பேர்களுக்கு வேலைவாய்பை உறுதி செய்யும் வகையில் சிப்காட் தொழில் பூங்கா அமைய அறிவிப்பு வெளியிட்ட தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் அவரை திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தனது விளை நிலங்களில் விளைந்த முக்கனிகளை வழங்கி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தலைமை செயற்குழு உறுப்பினர் யூ எஸ் டி சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட பொருளாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன் மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



