அரியலூர்,நவ;21
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிலுப்பனூர் கிராமத்தில் 100 நாள் வேலை மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெற்று வரும் வேலையானது தற்பொழுது ஊர் தெரு மக்கள் இவர்களுக்கு ஒதுக்கிய இடத்தில் போதிய தொகை இருப்பதனால் 100 நாள் வேலை செய்து வருகின்றனர். இந்த வேலை அதே கிராமத்தில் காலனி மக்களுக்கு ஒதுக்கிய இடத்தில் வேலை முடிந்து அதற்கான தொகை முடிந்து விட்டதாக பஞ்சாயத்து நிர்வாகம் கூறியதால் எப்படி எங்களுக்கான முடியும் எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என கோரி சிலுப்பனூர் காலனி மக்கள் 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் திரண்டு செந்துறை – தளவாய் டூ பெண்ணாடம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். மறியல் செய்வதை கைவிட்டு தளவாய் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு சென்றதால் சாலை மறியல் செய்ய இருந்த காலனி மக்கள் எங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என கோரி செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையில் தளவாய் காவல்துறை ஈடுபட்டனர் இருந்தும் இதனை பொருட்படுத்தாத காலனி மக்கள் சிலுப்பனூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தளவாய் போலீசார் மீண்டும் மக்களை எச்சரித்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்