ராமநாதபுரம், மே 28-
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா அலுவலகத்தில் 4 ஆம் நாள் ஜமாபந்தி நடந்தது. கோவிலாங்குளம் உள்வட்டம் சீமானேந்தல், புதுக்கோட்டை, கள்ளிகுளம், கோவிலாங்குளம், ஊ. கரிசல்குளம், கே. வேப்பங்குளம், அரியமங்கலம், முதலியார் புதுக்குளம், வில்லா னேந்தல், கொம்பூதி கிராம மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் தொடர்பாக மாவட்ட பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் மாரிமுத்துவிடம்
கோரிக்கை மனு அளித்தனர். அடங்கல், பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல், முதியோர் ஓய்வூதியர் பதிவேடு உள்ளிட்ட கிராமக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. மே 20, 23 ல் நடந்த ஜமாபந்தி முகாமில் கோரிக்கை மனு அளித்த 3 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. தாசில்தார் காதர் முகைதீன், சேதுராமன் (சமூக பாதுகாப்பு திட்டம்) தலைமையிடத்து துணை தாசில்தார் கீதா, மண்டல துணை தாசில்தார் வெங்கடேஸ்வரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மணி வல்லபன், வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாலதி (சீமானேந்தல்), ஜெகஜீவன்ராம் (புதுக்கோட்டை), ராஜபாண்டி (கள்ளிக்குளம், கோவிலாங்குளம்),
ராமர் (கரிசல்குளம்),
தாமரைக்கண்ணன் (அரியமங்கலம், எம். புதுக்குளம், வில்லானேந்தல்), கோபிநாத் (கொம்பூதி), ஹேமநாதன் (கே.வேப்பங்குளம்) உள்பட பலர் பங்கேற்றனர்.