பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நல்ல முறையில் நடத்தி முடிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளபடுகின்ரான
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 19.04.2024 அன்று 09.கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்கு பொதுதேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து, 09.கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 51.ஊத்தங்கரை (தனி), 52.பர்கூர், 53.கிருஷ்ணகிரி, 54.வேப்பனஹள்ளி, 55.ஓசூர், 56.தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 04.06.2024 அன்று காலை 8.00 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் கீழ்கண்ட அறைகளில் நடைபெற உள்ளது.
அதன்படி,
51.ஊத்தங்கரை (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 287 வாக்குசாவடி மையங்களில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் இயந்திரவியல் பிரிவு முதல் தளம், மேற்கு பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் அறையில் அமைக்கப்பட்டுள்ள 14 மேசைகளுக்கு சுமார் 21 சுற்றுகளும்,
52.பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 292 வாக்குசாவடி மையங்களில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள நிர்வாகவியல் பிரிவு முதல் தளம் கிழக்குப் பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் அறையில் அமைக்கப்பட்டுள்ள 14 மேசைகளுக்கு சுமார் 21 சுற்றுகளும்,
53.கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 310 வாக்குசாவடி மையங்களில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள கட்டடவியல் பிரிவு தரைத் தளம் மேற்குப் பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் அறையில் அமைக்கப்பட்டுள்ள 14 மேசைகளுக்கு சுமார் 23 சுற்றுகளும்,
54.வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 312 வாக்குசாவடி மையங்களில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் மின்னணுவியல் பிரிவு முதன்மைக் கட்டிட வகுப்பு அறை முதல் தளம் மேற்குப் பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் அறையில் அமைக்கப்பட்டுள்ள 14 மேசைகளுக்கு சுமார் 23 சுற்றுகளும்,
55.ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 382 வாக்குசாவடி மையங்களில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் நூலகக் கட்டிடம் தரைத்தளம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் அறையில் அமைக்கப்பட்டுள்ள 14 மேசைகளுக்கு சுமார் 28 சுற்றுகளும்,56.தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 305 வாக்குசாவடி மையங்களில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் மின்னணுவியல் பிரிவு வகுப்பு அறை முதல் தளம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் அறையில் அமைக்கப்பட்டுள்ள 14 மேசைகளுக்கு சுமார் 22 சுற்றுகளும்,09 கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அஞ்சல் வாக்குகள் கணிணி அறிவியல் ஆய்வக அறை தரைத்தள கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 மேசைகளில் வைத்தும் எண்ணப்படவுள்ளன. அதன்படி, 09.கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 1888 வாக்குச்சாவடி மையங்களில் பெறப்பட்ட வாக்குகள் அமைக்கப்பட்டுள்ள 7 அறைகளில் 94 மேசைகளில் சுமார் 138 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
56.தளி சட்டமன்ற தொகுதியில் 1,26,518 ஆண் வாக்காளர்கள், 1,20,927 பெண் வாக்காளர்கள், 44 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,47,489 வாக்காளர்களில் 90,011 ஆண் வாக்காளர்கள் 83,488 பெண் வாக்காளர்கள் மற்றும் 14 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1,73,513 வாக்காளர்கள் வாக்களித்ததன் மூலம் 70.11 சதவிகிதம் பதிவாகி உள்ளது. எனவே, 09.கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 8,14,076 ஆண் வாக்காளர்கள், 8,08,798 பெண் வாக்காளர்கள், 305 இதர வாக்காளர்கள் என 16,23,179 மொத்த வாக்காளர்களில் 5,87,007 ஆண் வாக்காளர்கள் 5,73,412 பெண் வாக்காளர்கள் மற்றும் 79 இதர வாக்காளர்கள் என 11,60,498 வாக்காளர்கள் வாக்களித்ததன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 71.50 சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 85 வயதிற்கு மேற்பட்ட 14,787 மூத்த குடிமக்கள் வாக்காளர்களில் 1,603 மூத்த குடிமக்கள் விருப்பம் தெரிவித்து 1,499 தபால் வாக்குகள் பதிவு செய்துள்ளனர். மேலும், 14,437 மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் 640 மாற்றுத்திறனாளிகள் விருப்பம் தெரிவித்து 638 மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் பதிவு செய்துள்ளனர். அதன்படி, மொத்தம் 29,224 வாக்காளர்களில் 2,544 வாக்காளர்களுக்கு 12டி படிவம் வழங்கப்பட்டு 2,243 வாக்காளர்கள் விருப்பம் தெரிவித்து 2,137 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களிடமிருந்து 2240 அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. அதே போன்று இராணுவத்தில் பணிபுரியும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்களிடமிருந்து நாளது வரை 2163 அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
அஞ்சல் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களின் முன்னிலையில் 10 மேசைகளில் தலா 1 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், 1 வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், 2 வாக்கு எண்ணும் உதவியாளர்கள், 1 நுண்பார்வையாளர் முன்னிலையில் எண்ணப்படும். மிண்ணணு இயந்திரஙகள் வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் உள்ள 84 மேசைகளுக்கு 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 102 வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள் 102 உதவியாளர்கள், 102 நுண்பார்வையாளர்கள், 27 வேட்பாளர்களின் 864 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 1 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 8 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 23 காவல் ஆய்வாளர்கள், 76 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 771 காவலர்கள் என மொத்தம் 802 காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தலைமை தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி, வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் நபர்கள் அனைவரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நல்ல முறையில் நடத்தி முடிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். .கே.எம்.சரயு., அவர்கள் செய்தியாளர்களிடம்
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் தேர்தல் .லெனின், தேர்தல் வட்டாட்சியர் .சம்பத், தனி வட்டாட்சியர் .ஜெய்சங்கர் மற்றும் செய்தியாளர்கள் கலந்துக்கொண்டனர்.