நாகர்கோவில் – ஜூன் – 26,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் எஸ் எல் பி அரசு உயர்நிலைப் பள்ளியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் மாணவியர்கள் திண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியை நேற்று காலை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த பத்தாம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது பள்ளியின் கட்டிடங்களை சீரமைத்தல், பள்ளியை சுத்தப்படுத்துதல், மாணவ மாணவியர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிகள் மேசைகள் ஆகியவற்றை பழுது நீக்குதல், கழிவறைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அந்தந்த பள்ளி நிர்வாகம் செய்வது வழக்கம். ஆனால் நாகர்கோவில் மத்திய பகுதியில் உள்ள எஸ் எல் பி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இது போன்ற சீரமைப்பு பணிகள் எதுவும் செய்யாததால் கழிவறைகள் சுகாதாரக் கேடாக உள்ளது. மேலும் கதவுகள் உடைந்து நாசமாகி உள்ளது. குடிக்க தண்ணீர் இல்லாமல் உள்ளது. இதே போன்று மதிய உணவு அருந்த மாணவிகளுக்கு இடமில்லாமல் பள்ளி வளாகத்தில் உள்ள தரையில அமர்ந்து உணவருந்தக் கூடிய ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது மழைக்காலத்தில் மேலும் மாணவியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதனை அறிந்த பெற்றோர்கள் நேற்று அரசு பள்ளியை முற்றுகையிட முயன்றதால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கோட்டார் காவல் நிலைய போலீசார் வருகை தந்து அவர்களை சமாதானப்படுத்தி கால அவகாசம் கேட்டு அதற்குள் முடித்து தருகிறோம், சீரமைப்பு பணிகளை முடித்து தருவோம் என உறுதி அளித்ததின் பேரில் பெற்றோர்கள் கலந்து சென்றனர். மேலும் இந்தப் பள்ளியில் மது பிரியர்கள் இரவு நேரங்களில் சுவர் ஏறி குதித்து மது அருந்திவிட்டு மது பாட்டில்களை ஆங்காங்கே வீசி செல்வதால் மாணவ மாணவிகள் விளையாடும் போது அவர்களின் கால்களில் பீங்கான் துகள்கள் அறுத்து காயம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது மேலும் கழிப்பறைகளில் மற்றும் பள்ளி வளாகத்தில் தூய்மை இல்லாத காரணத்தினால் விஷ ஜந்துக்களில் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் பெற்றோர்கள் குறை கூறி வருகின்றனர் இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி சாமுகி கூறியதாவது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இடம் கிடைப்பது ஒரு பெரும் சவாலாக இருந்தது ஆனால் இப்போது நிலைமை அப்படியே இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையால் தலை கீழாக மாறி உள்ளது இப்பள்ளியில் மாணவர்கள் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலும் மொத்தம் ஆண்கள் – 141, பெண்கள் – 26 என மொத்தமாக மாணவ, மாணவியர்கள் 167 பேர் மட்டுமே பயின்று வருகின்றனர். இவர்களுக்கு பாடம் கற்பிக்க 13 ஆசிரியர்கள் இப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் தற்போது பணி புரிந்து வரும் தலைமை ஆசிரியை இப்பள்ளியில் பயிலும் மாணவிகளை வெளியேற்றிவிட்டு ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளியாக மாற்றுவதாக இங்கு பயின்று வந்த மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து உங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் கொண்டு சேர்க்கும் படி வலியுறுத்துவதாகவும் இதனால் இப்பள்ளியில் பயின்ற மாணவிகள் பல பேர் மாற்று சான்றிதழ்களை வாங்கிவிட்டு வேறு பள்ளிகளில் சேர்ந்து பயின்று வருவதாகவும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவி சாமுகி இப்பள்ளி தலைமை ஆசிரியை மீது பெரும் குற்றச்சாட்டை வைக்கின்றார். அவர் கூறியது போன்று இப்பள்ளியில் மாணவிகள் தற்போது 26 பேர் மட்டுமே பயின்று வருவது என்பது குறிப்பிடதக்கது ஆகும்.