திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டியில் 150 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமுத்தாலம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது, விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் பூ பல்லக்கு ஊர்வலமம் நடைபெற்றது.இதில் முத்தாலம்மன் 5 டன் மலர்களால் அலங்கரிங்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார்,
கடை வீதி, பேருந்து நிலையம், மற்றும் பிரதான சாலை வழியாக நகர்வலம் வந்தார். வழி நெடுகிலும் ஓம் சக்தி பராசக்தி கோசம் வின்னைமுட்ட அம்மனை வரவேற்ற பொதுமக்கள் பக்தர்கள் அபிஷேக ஆராதனைகள் செய்து தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலை அடைந்து அம்மனுக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தில் விளாம்பட்டி, முத்தாலபுரம், அணைப் பட்டி, ராமராஜபுரம், சொக்கு பிள்ளை பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் பெற்றனர்.