தஞ்சாவூர். ஏப்ரல்.4
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 20-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் தலைமை அன்னை முனைவர் மரிய பிலோமி தலைமையில் நடைபெற்றது.
கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி மரியம்மாள்,இயக்கு
நர் அருட்சகோதரி டெரன்சியா மேரி விழாவினை ஒருங்கிணைத்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் செ.காயத்ரி அனைவரையும் வரவேற்றார்
சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையின் பேராசிரியர் முனைவர் எஸ். வின்சென்ட் சிறப்பு விருந்தி னராக கலந்துக் கொண்டு, நாளைய சமுதாயத்தை நிர்வகிக் கும் ஆளுமை படைத்தவர்கள் உங்களால் மட்டுமே புதியதொரு சகாப்தத்தை உருவாக்க முடியும். அத்தகைய முன்னேற்றப் பாதைக் கான முதல் அடியை இக்கல்லூரி யில் எடுத்து வைத்துள்ளீர்கள் என்று விழாப் பேருரையாற்றிப் பட்டம் பெற்ற மாணவிகளை வாழ்த்தினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் செ.காயத்ரி பட்டமளிப்பு விழா உறுதிமொழியைக் கூற மாணவி கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த 179 மாணவிகளும் பதக்கங்களும், சான்றிதழ்களும் பெற்றனர். இளங்கலை மாணவி கள் 913 பேர், முதுகலை மாணவி கள் 194 பேர், ஆய்வியல் நிறைஞர் மாணவி ஒருவர் என மொத்தம் 1287 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
. கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கப் பேரவைத் தலைவி செல்வி. சுபஸ்ரீ இக்கல்லூரியில் தான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் கல்வியாளர்கள், துணை முதல்வர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள், அவர்தம் பெற்றோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.