By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் பேட்டி
தமிழ்நாடுதிருப்பத்தூர்

பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் பேட்டி

Last updated: December 17, 2025 4:43 pm
December 17, 2025
16 Views
Share
SHARE

திருப்பத்தூர், டிச. 17 –

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க.மோகன் காந்தி, காணி நிலம் மு.முனிசாமி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் பல்லவர் கால நடுகல் ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து முனைவர் க. மோகன் காந்தி கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊருக்கு அருகேயுள்ள கல்லாத்தூர் என்ற ஊரில் கள ஆய்வை எங்கள் ஆய்வுக்குழு மேற்கொண்டது. கல்லாத்தூருக்கு அருகேயுள்ள மலைகளும், காடுகளும் சூழ்ந்த இடத்தில் குப்பநத்தம் அணையின் நீர்நிலை அருகே இயற்கை சார்ந்த இடத்தில் ஒரு சிறிய கோயில் ஒன்று இருப்பதாகத் தூய நெஞ்சக் கல்லூரி மாணவி நித்யஸ்ரீ கொடுத்த தகவலின் பேரில் ஆய்வு செய்தோம். அக்கோயிலின் கருவறையில் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்த நடுகல் இருப்பதைக் கண்டறிந்தோம். இந்நடுகல் நான்கடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட அழகான பலகைக் கல்லில் வீரனின் உருவம் புடைப்புச் சிற்பமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சங்ககாலம் தொட்டே தமிழர் மரபில் நடுகல் வழிபாடு முதன்மையுடையதாக இருந்து வந்துள்ளது. தன் நாட்டையோ, தன் ஊரையோ, தம் செல்வமான மாட்டு மந்தைகளையோ பகைவர்கள் கவர வரும்போது, அத்தகைய பகைவர்களோடு வீரத்தோடுப் போராடி உயிர்விட்ட வீர மறவர்களுக்கு எடுக்கப்படுவது நடுகல்லாகும். சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான மலைபடுகடாம் என்ற நூல் செங்கண்மாவை (செங்கம்) தலைநகரமாகக் கொண்டு ஆட்சிப் புரிந்த நன்னன் சேய் நன்னன் என்ற மன்னன் ஆட்சிப் புரிந்தான் என்ற செய்தியைப் பதிவு செய்துள்ளது. நன்னன் அரசாண்ட மலையின் பெயர் நவிரமலை இந்த நவிரமலைத் தற்போது ஜவ்வாது மலை என பெயர் மாற்றம் அடைந்துள்ளது. மலைபடுகடாமில் இரண்டு இடங்கள் நடுகல் வழிபாட்டைப் பற்றியும் இரண்டு இடங்கள் நவிர மலை என்பதைப் பற்றியும் இரண்டு இடங்களில் பதிவு செய்துள்ளது. எங்கள் ஆய்வுக் குழு ஜவ்வாது மலையிலு ள்ள புதூர் நாடு, ப புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடுகளுக்கு உட்பட்ட 12 இடங்களில் நவிர மலை என்ற கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளது.

மலைபடுகடாம் குறிப்பிடும் நவிரமலை மரபை இந்த நடுகல் தாங்கி நிற்கிறது. செங்கம், பரமனந்தல், கல்லாத்தூர், கிளையூர், ஊர்க் கவுண்டனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லவர் காலத்திலேயே பெரும் போர்கள் நடந்ததற்கு அடையாளமாக இந்நடுகல் சான்றாக உள்ளது. இந்நடுகல்லின் சிற்ப வடிவம் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கலை நுட்பத்துடன் காட்சித் தருகிறது.

நான்கடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் நடுகல் வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. போர் மறவனுக்கான ஒல்லியான தேகம், வலதுபக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டை, பெரிய துளைகளுடன் கூடிய காதுகள், நேராகப் பார்த்த வண்ணம் வடிவமைக்கப்பட்ட முகம். முகத்தில் பெரிய மீசை, கழுத்தில் ஆபரணம், கைகளில் வீரக் கடகம், கால்களில் வீரக்கழல், இடையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஆடை என்ற நுட்பமாக இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

இந்நடுகல்லின் மிகப்பெரிய சிறப்பு யாதெனில் இடது கையில் பெரிய வில்லைத் தாங்கிக் கொண்டு, வலது கையில் வில்லின் நாணில் அம்பை ஏற்றி பகைவர்கள் மேல் எய்யும் கோலத்தில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. வலது தோள்பட்டையின் பின்புறத்தில் மூன்று அம்புகளைத் தாங்கிய அம்புக்கூடு ஒன்று காட்டப்பட்டுள்ளது. இந்த வீரனின் தோற்றத்தைப் பார்க்கும் போது இப்பகுதியை ஆட்சி செய்த இனக்குழுத் தலைவன் போலக் காட்சித் தருகிறான்.

வட தமிழகத்தில் இதுபோன்ற நடுகல் சிற்பங்களை மக்கள் வேட்டையப்பன் என்றழைப்பது மரபு. காலப்போக்கில் வேட்டையப்பன் பெயர் மருவி வேடியப்பன் என்று அழைக்கப்படுகிறது. பல்லவர் காலத்தில் ஏறத்தாழ 1300 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதியில் நடைபெற்ற போரினை இந்நடு கல் வெளிப்படுத்தி நிற்கிறது. இக்கோயிலைச் சுற்றி சில பழங்கற்காலக் கருவிகளும் காணப்படுகின்றன. இவை ஆராய்ச்சிக்குரியன என்று அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

காக்கங்கரை இரண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 1 லட்சத்து 71 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
கன்னியாகுமரி அருகே வியாபாரியை காரில் கடத்தி தாக்கி செல்போன் பறிப்பு; வக்கீல்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு
ஹிந்து தேசத்தில் ஹிந்துக்கள் புத்தகத்தின் தமிழாக்கம் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கோலாகலமாக நடைபெற்ற பட்டம் சூட்டு விழா

October 6, 2024
131 Views
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி
எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவேந்திரர் பண்பாட்டுக்கழகம் கண்டனம்
மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account