தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வருகிற ஏப்ரல் 7.4.2025 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் ஆலயத்தில் கும்பாபிஷேக பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது நடைபெற்று வரும் பணிகளை தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கும் படி கேட்டுக் கொண்டார் ஆய்வின் போது காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன்,செயல் அலுவலர் பொன்னி, தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், பாலு என்ற சண்முகவேல், பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.



