மதுரை பிப்ரவரி 11,
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாலாலயம் விழா கோலாகலம்
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்திட திருக்கோவிலில் பாலாலயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாலாலயம் நடந்தது. திருக்கோவிலுக்குள் திருவாசல் மண்டபத்தில் கோவிலின் ஏழு நிலை ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், மற்றும் வல்லப கணபதி விமானம் என்று 3 வேதிகைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் 3 யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில் பட்டுநூல், தர்ப்பைபுல் கொண்டு கோவிலின் 7 நிலை கொண்ட ராஜகோபுரத்திலிருந்து சக்தியை கும்பத்திலிருந்து பிம்பத்திற்கு இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல கோவர்த்தனாம்பிகை விமானம் மற்றும் வல்லப கணபதி விமானத்திலும் சக்தி கலையம் இறக்கும் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோவிலுக்குள் பூஜை செய்யப்பட்ட குடம் புறப்பாடு நடந்தது. நேற்று காலையில் 2-ம் காலம் யாகசாலை பூஜை நடக்கிறது. பகல் 12 மணியிலிருந்து 12:15 மணிக்கு மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோவில், சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில், கீழத்தெருவில் உள்ள குருநாதன் கோவில், மேலரத வீதியில் உள்ள பாம்பலம்மன் கோவில்கள் உள்பட 6 உபகோவில்களில் திருப்பணிகள் செய்வதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.