தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரச்சாரம் தொடக்க விழா பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். கட்சியின் நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்புரை ஆற்றினார். கட்சியின் அமைப்புச் செயலாளர் முல்லைவேந்தன், விவசாய பிரிவு மாநிலத் தலைவர் அன்பழகன், எம்எல்ஏக்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் அன்பழகன் திண்ணை பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் வீதி, வீதியாக நடந்து சென்று வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு துண்டு பிரச்சாரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய செயலாளர்கள் ,சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மொரப்பூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.



