தஞ்சாவூர் ஜன.26.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி பாதயாத்திரை மேற்கொண்ட தருமபுரம் ஆதீனம் திருவையாறுக்கு வந்தார்
திருக்கைலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்த மான திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் மகாகுட முழுக்கு விழா பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது .இதையொட்டி தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சந்தி தானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலா மணி தேசிக பரமாச்சாரிய சுவாமி கள் தருமபுரம் தலைமை மடத்திலி ருந்து சொக்கநாதபெருமான் பூஜையுடன் தொடங்கி, திருவை யாறு நோக்கி பாதயாத்திரையை ஜனவரி19ஆம் தேதி தொடங்கினா ர்.
தருமபுர ஆதீன தம்பிரான் சுவாமிகள், ஓதுவார்கள், அதீன நிர்வாக பொறுப்பாளர்கள் ,வேத பண்டிதர்களுடன் நாள்தோறும் 12 கிலோமீட்டர் நடை பயணம் மேற் கொண்ட அவர் குற்றாலம், கும்பகோணம் ,சுவாமிமலை, கபிஸ்தலம் ,திருப்பழனம் வழியாக திருவையாருக்கு வந்தார்.
நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்ற குரு மகா சன்னிதானத்திற் கு பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் மேள, தாளம் முழங் க வரவேற்பளித்தனர். . திருவையாறு தூய இருதய அன்னை ஆலய பங்குத்தந்தையர் கள் பொன்னாடை மாலை அணி வித்து வரவேற்றனர் .ஐயாறப்பர் கோவிலுக்கு சென்ற குரு மகாசந்நி தானத்தை அம்மன் சன்னதியில் கோவில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் பூரண கும்பமரியாதை யுடன் வரவேற்றார்கள்.