தென் தாமரை குளம் மே 2
கன்னியாகுமரி பழத்தோட்டம் கந்தசாமி மருத்துவமனை, வசந்தம் மருத்துவமனை மற்றும் கலப்பை மக்கள் இயக்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை டாக்டர் பாபுராஜன் தலைமையில், டாக்டர் தனலட்சுமி முன்னிலையில், பி.டி.செல்வகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றனர்.
தொடக்க நிகழ்வில் பலர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.