நாகர்கோவில், ஜூன் – 26
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான மெர்லியன்ட் தாஸ் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்
மாவட்ட ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் திட்டங்கள் தொடர்பான 02/2024 முதல் 05/2024 வரையிலான மாதங்களுக்கான செலவினங்கள் மன்றம் அங்கீகாரம் செய்தல், மற்றும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடைபெற்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-
குமரி மாவட்டம், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலக்குளம் ஊராட்சி பகுதியில் அமைந்து வேலுதம்பி அவர்களின் நினைவு இல்லத்தினை அரசுடைமையாக்கி சுற்றுலா ஸ்தலமாக அறிவித்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெருகி வரும் கள்ளச் சாராய விற்பனையினை அடியோடு ஒழித்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் பெருகி வரும் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தினை அடியோடு தடுத்திட மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கேட்டும், சமீபத்தில் பெய்த பருவ மழையினால் சாலைகளில் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக
செப்பனிட்டு தரக்கோரி மாவட்ட நிர்வாகத்தினைக் கேட்டும், குமரி மாவட்டத்தில் அனைத்து பாசன கால்வாய்களும் தூர்வாரப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள கேட்டும்,
மாவட்டத்தில் அனைத்து தமிழக அரசு பேரூந்துகளிலும் மாணவ,
மாணவியர்களுக்கு இலவச பேரூந்து சலுகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில
பேருந்துகளில் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.சி. மாணவர்களிடம் கட்டாய கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. இதனை தடுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திடவும், குமரி மாவட்டத்தில் தேன் உற்பத்தி விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து தேனையும் மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் வாயிலாக தமிழக அரசு கொள்முதல் செய்து நியாய விலை கடை மூலம் விற்பனை செய்திடவும்,
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்களின் புதிய சம்பள உயர்வு 3 வருடங்களுக்கு ஒரு முறை உயர்த்தி வழங்கப்படும். தற்போது 01.12.2022-ல் வழங்கப்படவேண்டிய சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள
சம்பள உயர்வினை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள கேட்டும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் வளர்ச்சி பெறாத குக்கிராமங்கள் அதிகம் உள்ளது. மேற்படி கன்னியாகுமரி மாவட்ட கிராம ஊராட்சிகளை போரூராட்சிகள் மற்றும் மாநகராட்சியோடு இணைத்திடும் நடவடிக்கையினையும், 4 கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கையினை
உடனடியாக கைவிடக்கோரியும், மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டினை உடனடியாக சரிசெய்திட தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திடக்கேட்டும்,
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் மற்றும் இருவழி இரயில் பாதை பணிகளை விரைந்து முடித்து நடவடிக்கை எடுத்திடக்கேட்டும், பொது மக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர கேட்டும்,
உணவகங்கள் மற்றும் தெருவோர கடைகளில் உணவுகள் சுகாதாரமற்ற வகையில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உணவகங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரமான முறையில் உணவுகளை
விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்திடக்கேட்டும், கன்னியாகுமரி மாவட்ட குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டத்தினை தடுத்திட மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுத்திடக்கேட்டடும்,
கன்னியாகுமரி- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட உள்ள சுங்க கட்டண சாவடி பணியினை ரத்து செய்திட கோரியும், புதிதாக
16 வருவாய்த்துறை திட்டங்கள் குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல்.
காவல்துறை குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல்.
போக்குவரத்து காவல்துறை குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல்.
தென்னக இரயில்வே குறித்து தெற்கு இரயில்வே திட்டங்கள் குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல்.
மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் துறை குறித்து விவாதித்தல் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல்.
கதர் கிராம தொழில் வாரியம் குறித்து விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்தல். போன்ற 22 அம்ச கோரிக்கைகளுக்கான தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.