நாகர்கோவில் – அக்- 11,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் மெர்லியன்ட் தாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம் 18.10. 2024 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 11:30 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வளாகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற உள்ளது. எனவே கூட்டத்தில் உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நடைபெறும் சாதாரண கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் விவாதிக்க பட உள்ளது. அவையாவன
மாவட்ட ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் திட்டங்கள் தொடர்பான 08 / 2024 மற்றும் 09/ 2024 மாதங்களுக்கான செலவினங்கள் மற்றும் அங்கிகாரம் செய்தல். மகளிர் திட்டம் குறித்து விவாதித்தல் , தென்னக ரயில்வே திட்டங்கள் குறித்தும் சுகாதாரத்துறை குறித்தும், இந்து சமய அறநிலைத்துறை குறித்தும் , தமிழ்நாடு வாழ்வாதார ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் குறித்தும் , வருவாய் துறை குறித்தும் , கால்நடை துறை குறித்தும், மின்சாரத்துறை, கட்டுமானத்துறை குறித்தும் விவாதித்தல் மற்றும் ஆய்வு செய்யப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.