தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினருமான, முன்னாள் அமைச்சருமான தங்கவேலு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட பொருளாளர் சரவணன்,சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு விளையாட்டு மேம்பாட்டு அணி அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, வெள்ளத்துரை, நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், சார்பு அணி நிர்வாகிகள் ராயல் கார்த்தி,செல்வராஜ், மணிகண்டன்,அப்பாஸ், கார்த்திக் ,மகேந்திரன், மகாராஜன், கணேசன், வீமராஜ் ,அரவிந்த், நகர துணை செயலாளர் சுப்புத்தாய், சென்னிகுளம் முருகேசன்,முத்துராஜ்,நவநீதகிருஷ்ணாபுரம் குருசாமி,முருகன், சசி,சூர்யா, தொழிலதிபர் திவ்யா ரெங்கன், ஆறுமுகச்சாமி, பொன்ராஜ், வக்கீல்கள் அய்யாத்துரை, குருசூர்யா, ரமேஷ், அஜய் மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்



