டிச. 16
திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலக திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. திருப்பூர் அம்மன் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் தலைமையில் நடைபெற்றது. வடக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயமுருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேளதாளம் முழங்க கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து அம்மன் நகர் பகுதியில் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர்
வி எஸ் கோவிந்தராஜ் , மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர். திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஜெயமுருகன் , தலைவர் பொன்னுச்சாமி , தெற்கு சட்டமன்ற தொகுதி தலைவர் ரமேஷ் , செயலாளர் தங்கராஜ் , அவிநாசி சட்டமன்ற தொகுதி தலைவர் பழனிச்சாமி , செயலாளர் சரவணன். பிரகாஷ் முன்னாள் நகர செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். அலுவலக திறப்பு விழாவினை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வருகின்ற 21ஆம் தேதி திருவண்ணாமலையில் உழவர் பேரியக்கம் சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் திருப்பூரில் இருந்து திரளான பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொள்வது மற்றும் 24ஆம் தேதி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் வஞ்சிக்கும் மாநில அரசை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்பது.என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.