ஆத்தூர்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி, ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
மழைகாலங்களில் மழைநீரை சேமித்து வைக்கும் வகையில் குளங்கள், நீர் நிலைகள் துார்வாரப்பட்டு வருகின்றன. வாய்க்கால்கள் துார்வாரப்பட்டு சிமெண்ட் தளங்கள் அமைக்கப்பட்டு தண்ணீரை குளங்களுக்கு கொண்டு சென்று சேமிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குளங்கள், நீர்நிலைகளை துார்வாரும்போது அள்ளப்படும் மண் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாய மேம்பாட்டுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆத்தூர் ஒன்றியம் அக்கரைப்பட்டி ஊராட்சி, மல்லையாபுரத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.73.80 இலட்சம் மதிப்பீட்டில் கொம்பு அணை முதல் சீலையங்குளம் வரை சாய்தள வடிகால் மற்றும் பாலம் அமைக்கும் பணி தொடங்கி வைத்தார்
அதன் தொடர்ச்சியாக
சித்தரேவு ஊராட்சி, மருதாநதி அணை வடக்கு வாய்க்காலில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி என ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்கரைப்பட்டி ஊராட்சியில் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில்(2023-2024) ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி,
ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சணாமூர்த்தி, ஆத்தூர்வட்டாட்சியர் முத்துமுருகன்,
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் க.நடராஜன்,
ஆத்துார் ஊராட்சி ஒன்றியக்குழுத் முன்னாள் தலைவர் மகேஸ்வரி முருகேசன்,
ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.ராமன்
ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி மலைச்சாமி ஆத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் அக்கரைப்பட்டி சக்திவேல்
மாவட்டஇளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மு.பாஸ்கரன் மாவட்டவிவசாய தொழிலாளர்
அணிதுனை அமைப்பாளர்.மணலூர் ஜெயராஜ் முன்னாள் ஒன்றியகவுன்சிலர்கள் ஜோதி மலைச்சாமி சாதிக். காணிக்க சாமி பாப்பாத்தி அய்யம்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் ரேகா ஐயப்பன்
முன்னாள் வீரக்கல் ஊராட்சி கவுன்சிலர் வசந்தகுமார் அக்கரைப்பட்டி ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) கண்ணன் சித்தரேவு ஊராட்சி செயலாளர் சிவராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்