திருவாரூர்
மார்ச் 24
மே ஐந்தாம் தேதி வணிகர் சங்க மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது இந்த நிலையில் மாநாட்டிற்காக அழைப்புகள் கொடுப்பதற்காக திருவாரூர் மாவட்டத்திற்கு வணிகர் சங்க மாநில தலைவர் விக்ரம் ராஜா இரண்டு நாட்கள் சுற்று பயணம் செய்தார்
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சென்று வணிகர்களுக்கு மாநாட்டு அழைப்புகள் வழங்கினார். இந்த நிலையில் இன்று நன்னிலம் அச்சுதமங்களம் ஆண்டிபந்தல் சன்னாநல்லூர் பேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டிற்கான அழைப்புகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து கொல்லுமாங்குடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வர்த்தக சங்க தேர்தல் நடைபெற்று அதில் வர்த்தக சங்க தலைவராக அமுதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று வர்த்தக சங்க மாநில தலைவர் விக்ரம் ராஜா தலைவர் புதிய தலைவர் அமுதன் மற்றும் நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
அப்போது மேடையில் பேசிய அவர் இந்த ஆன்லைன் வர்த்தகம் என்பது நம் வணிகத்தை சுரண்டி கொண்டிருக்கிறது. நாம் எல்லாம் காலை 9 மணிக்கு கடையை திறந்து இரவு 10 மணிக்கு பூட்டி விடுகிறோம், ஆனால் 24 மணி நேரமும் ஆன்லைன் வர்த்தகம் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று டி-மார்ட் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகள் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சட்டத்திற்கு புறம்பாக கடைகளை அமர்த்தி வருகிறார்கள்.
அதை எதிர்ப்பதற்கு அப்புறப்படுத்துவதற்கு சட்டரீதியாக பிரச்சினையை கையாண்டு கொண்டிருக்கிறோம்.
அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சரிடமும் முறையிட்டு இருக்கிறோம். அதேபோல மத்திய வர்த்தகத் துறை அமைச்சரிடமும் வலியுறுத்தி இருக்கிறோம்
மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமானிடம் இந்த கார்ப்பரேட்களால் நெருக்கடி என்று சொல்லிருக்கிறோம். அவர்களும் பல்வேறு புள்ளி விவரங்களை தந்துருக்கிறார்கள். அமேசான் நிறுவனம் கெட்டுப்போன 10 லட்ச ரூபாய் பொருட்களை வாங்கி இருப்பு வைத்ததாக தகவல் தருகிறார்கள். அது 10 லட்சம் அல்ல பல கோடி ரூபாய் இருப்பு. அவர்கள் கெட்டுப் போன பொருட்களை வாங்கி வேறு பாக்கெட் செய்துதான் விநியோகம் செய்து வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. எப்போதுமே உள்ளூரில் உள்ள வணிகர்கள் தான் தரமான பொருளை தரக்கூடியவர்கள் காரணம் வாங்க கூடிய பொருள்களோடு சேர்த்து பாசப்பணி போடு பழகக் கூடியவர்கள் நம் வணிகர்கள் தான் என பேசினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.