சுசீந்திரம்.ஏப்.13
குமரி மாவட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டுகு தமிழ்நாட்டில் முதல் முறையாக ஊர் காவல் திட்டம் என்ற திட்டத்தை ஏற்படுத்தி ஒரு கிராமம், ஒரு காவலர் இரண்டு CCTV
என்ற திட்டத்தின் படி குமரி மாவட்டம் சுசீந்திரம் புல்லுவிளை கிராமத்தில் இன்று குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சிசிடிவி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ் நாட்டில் முதல்முறையாக குமரி மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் முதன் முதலாக ஊர்காவல் கண்காணிப்பு எனும் திட்டத்தை நேற்று குமரி மாவட்டம் சுசீந்திரம் போலீசரகத்திற்கு உட்பட்ட பறக்கை அருகே உள்ள புல்லுவிளை கிராமத்தில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஊர் மக்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒரு காவலர் நியமிக்கப்படுவார். குமரி மாவட்டத்தில் மொத்தம் 33 காவல் நிலையங்கள் உள்ளன இவற்றில் 97 தாய் கிராமங்களும் 1164 சிறிய கிராமங்களும் உள்ளன. இவற்றை 761 துணை ரோந்துகளாக பிரித்து ஒவ்வொரு ரோந்திற்கும் ஒரு காவலர் இந்த திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்டு அந்த காவலர் வாரத்திற்கு 3 முறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்கு மக்களுடன் நட்புறவை ஏற்படுத்துதல் வேண்டும். என்ற சமூக எண்ணத்தின் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 761 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்க 55 காவல் உதவி ஆய்வாளர்களும், 21 ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊர்க்காவல் திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களிலும் சி.சி.டி.வி. பொருத்தப்பட்டுள்ளது. என்ற நிலையை குமரி மாவட்டம் அடையும்.இதன் மூலம் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கும் நடந்த குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக அமையும் என குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று பேசினார். கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் புல்லுவிளை ஊர் தலைவர் நாகராஜன், முன்னாள் ஊர் தலைவர் அய்யாத்துரை, துணைத்தலைவர் சுரேஷ், பொருளாளர் பாஸ்கர், மற்றும் செல்வமணி, சுகந்தி, சந்தியா, மற்றும் ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் ஊர் செயலாளர் கனகராஜ் கண்காணிப்பு கேமரா உபயமாக வழங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், ராமநாதன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.