தருமபுரி காவேரி உபரி நீர் திட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு உழவர்கள் பேரியக்கம் சார்பில் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் காவிரியில் இருந்து கடலுக்குச் செல்லும் உபரி நீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் பம்ப் மோட்டர்கள் மூலம் நீரை நிரப்ப வலியுறுத்தி பேசினார்கள். இக்கூட்டத்தில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாரி மோகன், அரசாங்கம் மற்றும் உழவர்கள் பேரியக்கம் நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



