ஈரோடு மே 19
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவுபடி அமைச்சர் முத்துசாமி வழிகாட்டுதலின் படி ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் ஏற்பாட்டில் கடந்த 1 ந் தேதி முதல் ஈரோடு மணி கூண்டு அருகில் தினசரி நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு மார்க்கெட் பகுதிக்கு வரும் ஆயிரக்கணக்கான பேர் நீர் மோர் அருந்தி செல்கிறார்கள்
நேற்று 18 வது நாளாக நடந்த இந்த நிகழ்ச்சியில் தி மு க துணை பொதுசெயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம் பி மற்றும் மாநில விவசாய அணி இணை செயலாளர் குறிஞ்சி சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினர் இதில் கொல்லம்பாளையம் பகுதி செயலாளர் லட்சுமண குமார் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அந்தியூர் நித்தின் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர் .