சென்னை, வானகரத்தில் உள்ள சிபேட்-டிவிஎஸ் (CPAT-TVS) தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த வருடம் தொழில்நுட்ப படிப்பை முடித்துச் சென்ற 106 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இக்கல்லூரியின் 15 வது பட்டமளிப்பு விழாவாகும்
இந்த விழாவில் டிவிஎஸ் டிரெய்னிங் அன்ட் சர்வீசஸ் லிமிடெட் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் சென்னை இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரும் போல்ஸ்டார் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (OPC) பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலருமான சி.என்.பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் டிவிஎஸ் கல்வி குழுமத்தின் இயக்குனர் டாக்டர் மாலினி சீனிவாசன் சிறப்பு
அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் டிவிஎஸ் கல்வி குழுமத்தின் மூத்த ஆலோசகர்கள் சிபேட்-டிவிஎஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர்கள் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.