ராமநாதபுரம், ஜுலை 25-
அதிமுக ராமநாதபுரம் மாவட்டக் கழகம் சார்பில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் புறநகர் பஸ் டெப்போ முன்பாக அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஊனியசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மின் கட்டணம் உயர்வை கட்டுப்படுத்த முடியாத தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக கோரியின் கண்டன கோஷங்கள் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, டாக்டர் மணிகண்டன், மகளிர் அணி மாநில நிர்வாகிகள் கீர்த்திகா முனியசாமி, கவிதா சசிகுமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன், அதிமுக ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டியன், அவைத் தலைவர் சாமிநாதன், ஆர்.ஜி.ரத்தினம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனி முத்து, சுந்தர பாண்டியன், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கையில் அரிக்கேன் விளக்கு ஏந்தி திமுக அரசை கண்டித்தும் முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்



