அரியலூர், அக்;07
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த மருவத்தூர் கிராமத்தில் நடைபெற்ற பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம் நிறைவு விழா மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 30/09/2024 முதல் 06/10/2024 முடிய நடைபெற்றது. இம்முகாமில் பள்ளி வளாக தூய்மை, மருவத்தூர் முனியப்பா கோவில் பராமரிப்பு, அய்யனார் கோவில் உழவாரப்பணியில் 50 மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடுதல் , போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி , முழு சுகாதாரம் கழிப்பறை பயன்படுத்துதல் விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் பிளாஸ்டிக் ஒழிப்பு மஞ்சப் பையின் பயன்பாடு ,மழைநீர் சேகரிப்பு பேரணி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ,உயர்க் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளையும் மிகவும் சிறப்பாக நடத்திய முதுகலை ஆசிரியர் மற்றும் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் பஞ்சாபகேசன் அவர்களை என்எஸ்எஸ் மாவட்ட தொடர்பு அலுவலர் செல்ல பாண்டியன் ,மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா முருகன், தொழிற்கல்வி ஆசிரியர் செங்குட்டுவன் ,முதுகலை ஆசிரியர் ஜெயராமன் வாழ்த்து தெரிவித்தனர். என்எஸ்எஸ் திட்ட உதவி அலுவலர் வேல்முருகன் நன்றி தெரிவித்தார் .



