சேலம் அக்டோபர். 01 –
காமராஜர் இளைஞர் பேரவை மற்றும் பாரதீயம் நண்பர்கள் குழு சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு 17-ஆம் ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் ஏழை எளியவருக்கு தையல் மிஷின் வழங்கும் விழா சேலம் புத்து மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சுகுமார், கௌதமன், பூபதி ,ராஜா, சபரிநாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ராகுல் ஸ்போர்ட்ஸ் மற்றும் இளைஞர் நல கூட்டமைப்பின் தேசியத் தலைவர் விஜய லட்சுமணன், இராசி சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் கடற்கரய் மத்த விலாச அங்கதம் மற்றும் சேலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் 1000 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும், ஏழை எளியோருக்கு தையல் மிஷினும் வழங்கப்பட்டது. இதில் ராகுல் ஸ்போர்ட்ஸ் சார்பில் தேசிய தலைவர் விஜயலட்சுமணன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உட்பட மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.