தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் /பெஞ்சல் புயல் காரமணாக தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி, அரூர் வட்டம், கோட்டப்பட்டி ஊராட்சி, சிலம்பை பகுதியில் தரைப்பாலம் தாண்டி மழைநீர் செல்வதையும், பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளையும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை பார்வையிட்டார். உடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ச.திவ்யதர்சினி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சரவணன் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளனர்



