கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவில்,தோரிப்பள்ளி,தாசன் புறம் கிராமத்தில் சர்வே எண் 143-ல் உள்ள ஏரியை அதே கிராமத்தி சார்ந்த சின்னப்பா (எ) பெத்தண்ணா என்கிற நபர் ஆக்கிரமிப்பு செய்து வீடு மற்றும் வணிக நோக்கத்திற்க்காக கடை கட்டியுள்ளார். ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஏற்கனவே DRO,தாசில்தார்,RI,VAO என பல அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தோரிப்பள்ளி VAO லட்சுமணன், ஆக்கிரமிப்பை முன்னின்று செய்துள்ளார்,அரசு ஏரி நிலத்தை கணிசமான தொகைக்கு விற்பனை செய்வது தெரியவருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்து ஏரி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர் லஷ்மிநாராயணன் தெரிவித்துள்ளார்.